E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(i) 2012.11.08ஆம் திகதிய 1783/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2012.10.05ஆம் திகதிய 1778/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(iii) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் துறைமுகங்கள், மற்றும் விமான நிலையங்களிலிருந்து அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.11.09ஆம் திகதிய 1783/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில், நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(iv) 2012.10.05ஆம் திகதிய 1778/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) 2012.10.05ஆம் திகதிய 1778/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(vi) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் (2012.11.08ஆம் திகதிய 1783/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(vii) 2012.09.03ஆம் திகதிய 1774/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(viii) 2012.11.08ஆம் திகதிய 1783/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ix) 2012.11.08ஆம் திகதிய 1778/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(x) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 140 ஆம் 141ஆம் மற்றும் 164ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.11.08ஆம் திகதிய 1783/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2013) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சிகரட் பைகற்றுக்கான படரீதியான எச்சரிக்கையைக் காட்சிப்படுத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 டிசம்பர் 08ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks