E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

(i) 2012.11.08ஆம் திகதிய 1783/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(ii) 2012.10.13ஆம் திகதிய 1779/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iii) 2012.09.18ஆம் திகதிய 1776/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iv) 2012.08.10ஆம் திகதிய 1770/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(v) 2010 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2007, 2008, 2009, 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னேற்ற அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2013) ஒதுக்கப்பட்ட இருபத்தொராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இந்திய குடன்குளம் அணு மின்சக்திப் பிரச்சினை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 டிசம்பர் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks