E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவினத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2012

(ii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழு
(iii) 2009 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனம்
(iv) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i) திவிநெகும சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது) சமர்ப்பிக்கப்பட்டு எதிர்வரும் தினத்தொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

(ii) 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தல்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ மங்கள சமரவீர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2012 நவம்பர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1250 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks