E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கள் ஆணையாளரின் நிருவாக அறிக்கை

(ii) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
(iii) 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(iv) 2009 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(v) 2009 ஆம் ஆண்டிற்கான உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் நிறுவகம்
(vi) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (முப்பத்திரண்டாவது)
(vii) 2010 ஆம் ஆண்டிற்கான கொழும்புப் பல்கலைக்கழகம்
(viii) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
(ix) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்
(x) 2008-2009 ஆம் ஆண்டிற்கான எஸ்.ரீ.சி. ஜெனரல் டிரேடிங் கம்பனி லிமிடட்
(xi) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xii) 2009 ஆம் ஆண்டிற்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கை, வருடாந்த கணக்கறிக்கை
(xiii) 2011 ஆம் ஆண்டிற்கான அநுராதபுர மாவட்ட செயலகத்தின் செயற்திறன் அறிக்கைகளும், ஆண்டுக் கணக்குகளும்

(xiv) 2011ஆம் ஆண்டிற்கான காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
(xv) 2011 ஆம் ஆண்டிற்கான கமநல சேவைகள் மற்றும் வனவிலங்கியல் துறை அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ரணவிரு சேவா அதிகாரசபை (திருத்தம்)

1999 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ரணவிரு சேவா அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ புத்திக பதிரண அவர்களுக்கு "சிறுவர் புனர்வாழ்வு மைய (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "அல் - ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா அறாபி வித்தியாலய (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"வடக்கு கிழக்கு நிலைமை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இராஜயவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 செப்டெம்பர் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks