E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1989 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட (2012.03.30ஆம் திகதிய 1751/28ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி)
(ii) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட (2012.03.30ஆம் திகதிய 1751/29ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி)
(iii) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதியினால் விதிக்கப்பட்ட (2012.03.30ஆம் திகதிய 1751/31ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி)


பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2012 ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய சூழல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மருத்துவ மூலிகைகளை பயிர் செய்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1836 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks