E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் (2012.03.30ஆம் திகதிய 1751/27 ஆம் இலக்க அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரிகை)
(ii) 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நிருவாக அறிக்கைகள்
(iii) 2009 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ லங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை


கெளரவ ஜே.ஆர்.பி. சூரியப்பெரும அவர்களுக்கு "அபிமானி சமூக அபிவிருத்தி மற்றும் கலாசார மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
• ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான எட்டு தீர்மானங்கள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அரச சேவையில் ஆட்சேர்ப்புக்கள் பற்றிய அரச கொள்கை போன்றவை மீதான விஷேட பயிற்சி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1929 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks