E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
(ii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மலையக அபிவிருத்தி அதிகார சபையின்
(iii) 2009 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேஷன் லிமிட்டெட்டின்
(iv) 2010 ஆம் ஆண்டிற்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின்
(v) 2010 ஆம் ஆண்டிற்கான முதியோர்களுக்கான தேசிய சபையின்
ஆண்டறிக்கைகள்

(vi) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டத்தின் 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 23 ச ஆம் பிரிவின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 29 ஆம் திகதிய 1738/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்


கெளரவ அருந்திக பர்னாந்து அவர்களுக்கு "ஜயரத்ன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "ஹிஸ்புல்லாஹ் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) "அரச வங்கிகளிலிருந்து கடன் வாங்கி மீள செலுத்தத் தவறியவர்களின் பெயர்களை வெளியிடுதல்" எனும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"செயல் திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய சுயாதீன ஆணைக்குழு மற்றும் தகவல் அறியும் உரிமை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ லகஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks