E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2009 ஒற்றோபர் மாதம் 11 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலத்திற்கான இலங்கை தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்ரீலங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(v) 2007 ஆம் ஆண்டுக்கான நிருமாணப் பயிற்சி, அபிவிருத்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கை (ICTAD)
(vi) 2008 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி சபையின் வருடாந்த அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• சேர்பெறுமதி வரி (திருத்தம்)
• உண்ணாட்டரசிறை (திருத்தம்)
• நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
• துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்)
• பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தம்)
• நிதி



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மருத்துவ சிகிச்சைக்கான மாற்றுமுறைமைக்குரிய சட்டபூர்வமான அங்கீகாரம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாலித ரங்கே பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1837 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஏப்ரல் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks