மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ விஜயரத்ன, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கெளரவ (கலாநிதி) சரத் அமுணுகம அவர்கள் பின்வரும் சட்டமூலங்களைப் பிரேரித்தார்:-
1. சேர்பெறுமதி வரி (திருத்தம்)
(2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
2. உண்ணாட்டரசிறை (திருத்தம்)
(2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
3. நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
4. துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்)
(2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
5. பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தம்)
(2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதார சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
6. நிதி
(2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நிதிச் சட்டம், 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச்சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, நிதிச்சட்டம் என்பனவற்றைத் திருத்துவதற்கும் (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தினதும் (423ஆம் அத்தியாயமான) செலவாணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினதும் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் ஏற்பாடுகளின் ஏற்புடைமையிலிருந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்ட குறித்த சில தொழில் முயற்சிகளை விலக்களிப்பிற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றிற்கு இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்)
2011 டிசம்பர் மாதம் 17ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ (கலாநிதி) சரத் அமுணுகம, அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றம் 2012 மார்ச் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.