E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2008 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2008 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2009 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(v) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கறிக்கையும்
(vi) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(vii) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்
(viii) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2009 ஆம் ஆண்டுக்கான அநுராதபுரம் புத்தசிராவக்க பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2009 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xi) 2009 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழக கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xii) 2009 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழக தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xiii) 2009 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர்தரக் கல்விக்கான தேசிய நிலையத்தின் (உ.க.தே.நி.) வருடாந்த அறிக்கை (ஐந்தாவது வருடாந்த அறிக்கை)
(xiv) 2009 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை


2011 டிசம்பர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பாலித ரங்கே பண்டார அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


கெளரவ சாமிக புத்ததாஸ அவர்களுக்கு "அனுர விதானகமகே பிரஜா சங்வர்தன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கைத் தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கையில் உதைப்பந்தாட்டத்தை மேம்படுத்துதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றம் 2012 மார்ச் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks