பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2009/2010 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2007-2008 ஆம் ஆண்டுக்கான நோத்சீ லிமிடெட்டின் வருடாந்த கணக்கீடும் கணக்காய்வு அறிக்கையும்
(iii)
2006 மற்றும்
2007 ஆம் ஆண்டுகளுக்கான எல்கடுவ பிளான்டேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு
2012 மே மாதம் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
கெளரவ வை.ஜீ. பத்மசிறி அவர்களுக்கு
"ஸ்ரீ லங்கா கமநல நிறுவன (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"சிலாப மீனவர்களுக்கான நஷ்டஈடு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாலித ரங்கே பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றம் 2012 பெப்ரவரி 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.