E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

1. செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்

(இனங்காணப்பட்ட செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளை அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களை, தேசிய நலன்கருதி அரசுக்குரித்தாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய செயற்படு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுள் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுள் ஒன்றோ பலவோ தொடர்பில் தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமிப்பதற்கும்; மாற்றுப் பயன்பாடு மூலமும் மற்றும் அது தொடர்பில் நட்டஈடு செலுத்துதல் மூலமும் அவற்றின் பயனுள்ள முகாமைக்கும், நிருவாகத்துக்கும் அல்லது புத்துயிரளிப்புக்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்)

2. நாடு, நகரத் திட்டமிடல் (திருத்தம்

((269 ஆம் அத்தியாயமான) நாடு, நகரத் திட்டமிடற் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)


இலங்கை முதலீட்டுச் சபை (திருத்தம்)

தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "த இன்ஸ்ரிரியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் எக்கவுன்ஸை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• நொத்தாரிசுகள் (திருத்தம்) சட்டமூலம்
• ஆவணங்கள் பதிவு (திருத்தம்) சட்டமூலம்
• நிதிச்சட்டத்தின் கீழ் கட்டளை
• மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்கு விதிகள்


2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கானதொரு தெரிகுழு தாபிக்கப்படல் வேண்டுமென பாராளுமன்றம் தீர்மானித்தது.

அதனையடுத்து, சபையில் பிரேரிக்கப்பட்ட பலன புத்தர் சிலை அமைப்புச் சபை (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு, (சட்டவாக்க) நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் (கூட்டிணைத்தல்) சட்டமூலங்களும் பரிசீலிக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டன.

• ஸ்ரீ தம்மாலங்கார சமூக சேவைகள் மன்றம்
• இராமகிருஷ்ண சாரதா மிஷன் (இலங்கைக் கிளை)
• தெஹிவளை நெதிமாலை பெளத்த கலாசார நிலையம் (திருத்தம்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மக்கள் குத்தகை (பீ.எல்.ஸி.) கம்பனியில் பங்குகளை முதலீடு செய்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2011 நவம்பர் 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks