E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ அப்துல் ஹலீம் அவர்களுக்கு "ரன்ஜித் அலுவிஹாரே மன்ற (கூட்டிணைத்தல்)"சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• நிதித்தொழில் சட்டமூலம் - திருத்தங்களுடன்
• பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
• பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம்
• உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஆசியாவின் அதிசயம்: பிரதான நகரங்களின் அபிவிருத்தி" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ மனுஷ நாணாயக்கார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 22 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks