E   |   සි   |  

2026 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

'தித்வா' சூறாவளியால் உயிரிழந்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154ண(4)(அ) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவினால் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2025 ஆம் ஆண்டுக்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சேன நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச
நிலையான இலக்குகளின் ஊடாக சுற்றுலாத் துறையின் முன்னேற்றம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

'தித்வா' புயலால் உயிரிழந்தவர்களுக்கு முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி குறித்த கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள்) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பத்துளுஓயா ஜும்ஆ பள்ளிவாசலுக்குப் பின்புறமுள்ள காணியை மையவாடியாகப் பயன்படுத்த அனுமதி கோரல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற தாஹிர் மரைக்கார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 28ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks