E   |   සි   |  

2026 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
3 : குழுநிலைச் செலவினத் தலைப்புகளின் திகதி மாற்றம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2027 வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் நிரல்களில் உத்தேச திருத்தங்களின் பட்டியல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - ஒன்பது மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
செம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை

கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா  
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மேதகு இம்ரான் கான் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - குழு (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிண்ணியா தள மருத்துவமனையை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்வாங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 23ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks