பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXXIII (33) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVIII (18), XIX (19), XX (20), XXI (21) மற்றும் XXII (22) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XII (12), XIII (13), XIV (14) மற்றும் XV (15) ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் VIII (8), IX (9), X (10), XI (11), XII (12), XIII (13), XIV (14), XV (15), XVI (16), XVII (17), XVIII (18), XIX (19), XX (20), XXI (21), XXII (22), XXIII (23), XXIV (24) மற்றும் XXV (25) ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIV (34) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII (22), XXV (25), XXVI (26) மற்றும் XXVII (27) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIV (14) மற்றும் XVI (16) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVII (17), XX (20) மற்றும் XXI (21) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii) 2026 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(iii) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2026 ஒற்றோபர் 12 ஆம் திகதிய 2510/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சீ. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை முழுமையாகச் செலவிடாமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கொழும்பு நகர வெள்ளப்பெருக்கிற்கான விசாரணை, தீர்வு மற்றும் இழப்பீடு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அமில பிரசாத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1840 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 14ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks