பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : சிறப்புரிமை கேள்விகள் எழுப்பக் கோரி 2026 நவம்பர் 3 ஆம் திகதி 5 பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமாக
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
3 : 2026 நவம்பர் 12ஆம் திகதி, வியாழக்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் –
• 2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVI (46) ஆம் பகுதியையும்;
• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50) ஆம் பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIX (69) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX (20) மற்றும் XXI (21) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIV (14), XV (15) மற்றும் XVI (16) ஆம் பகுதிகள்
B.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXXI (31) ஆம் பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXVII (27) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV (15), XVI (16) மற்றும் XVII (17) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IX (9), X (10) மற்றும் XI (11) ஆம் பகுதிகளையும் ஐந்தாவது தொகுதியின் IX (9) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் IV (4), V (5), VI (6) மற்றும் VII (7)ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வருடாந்த அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு நிவாரண மன்றத்தின் (தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை) வருடாந்த அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - மூன்று மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
எரிபொருள் மானியம் தொடர்பான பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) 2026 மஹா பருவகாலத்தின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 2026.11.03 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செல்வி பாத்திமா ஷபீயா சேர்க்கப்படாமை தொடர்பாக 2026.10.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3, 4, 6 மற்றும் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடும் போக்கு காணப்படுவதாலும், அத்துடன் தினமும் பெருமளவானோர் தொழில் நிமித்தமாகவும் வர்த்தக தேவைகளுக்காகவும் புத்தளம் பாதையில் பயணம் செய்வதாலும், அப்பயணிகளுக்கு போதுமான சேவையை வழங்கும் நோக்கில் புத்தளம் கொழும்பிற்கிடையிலான புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் பாதசாரிகளுக்கு நிழல் வழங்குவதிலும், சுற்றாடலின் அழகையும் பசுமையையும் மேம்படுத்துவதிலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுபடுத்தும் வாயுக்களை உமிழ்வதிலும், நகர்ப் பிரதேசங்களில் உயிரியல் வழித்தடங்களாகச் (bio corridors) செயற்படுவதிலும் பாரிய பங்களிப்புக்களைச் செய்வதாலும், இலங்கையின் வீதி ஒதுக்குப்பிரதேசங்களில் உள்ள மரங்கள் தொழில்முறையாக (arborists மூலம்) நிர்வகிக்கப்படாததாலும், மின் விநியோக நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (PRDA), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மூலம் மின்கம்பிகளையும் வீதி சமிக்ஞைகளையும் மறைக்கும் கிளைகளை மாத்திரம் வெட்டி அகற்றுவதில் முறையற்ற வழிமுறையினை செயற்படுத்தப்படுவதாலும், சுற்றாடலின் எழிலைப் பாதுகாக்கும் வகையில் வீதி ஒதுக்குப் பிரதேசங்களின் அளவுகளை உரிய முறையில் நிர்ணயிப்பதன் மூலமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களைப் பயிற்றுவித்து, தாவரங்களைப் பராமரித்து வீதி ஒதுக்குப்பிரதேசங்களில் உள்ள மரங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலமும் விபத்துகளையும் பேரழிவுகளையும் தடுத்துக்கொள்ளக்கூடிய முறையான வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்
இலங்கையின் கல்வித் தரத்தை முன்னேற்றமடைந்த சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுவருவதன் பொருட்டு பாடசாலைக் கட்டமைப்பைச் சேர்ந்த சகல ஆசிரியர்களையும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றியமைக்க வேண்டியுள்ளதாலும், தற்போது பெரும்பாலான ஆசிரியர் களுக்கு மூன்றாண்டு கால கோட்பாட்டு மற்றும் செய்முறை ரீதியான பாடநெறியின் இறுதியில் உயர் டிப்ளோமா கிடைப்பதாலும், மூன்றாண்டு கால கோட்பாட்டு ரீதியான பாடநெறி மற்றும் பாடசாலையை மையப்படுத்திய ஓராண்டு கால பயிற்சியுடன்கூடிய நான்காண்டு கால பட்டப்படிப்பு பாடநெறியை அளிப்பதற்கேற்ற வகையில் தற்போது இயங்கி வரும் 19 கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றியமைப்பதற்கு அப்போதைய கல்வி அமைச்சரினால் 2020 பெப்ரவரி 13 ஆந் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்
உடவளவை தேசியப் பூங்கா, உடவளவை யானைகள் சரணாலயம், சங்கபால ரஜமகா விகாரை, உடவளவை நீர்த்தேக்கம், செவனகல சீனித் தொழிற்சாலை, செவனகல கரும்பு ஆராய்ச்சி நிலையம், உடவளவை நன்னீர் மீன்பிடி நிலையம் மற்றும் வவுல்பன சுண்ணாம்புக்கல் குகை முதலிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்கள் காணப்பட்ட போதிலும், முறையான ஒரு வேலைத்திட்டம் இன்மையாலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றின் பெறுமதியைக் கண்டுகளிக்க முடியாதிருப்பதாலும் இரத்தினபுரி மாவட்டத்தின் உடவளவை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் செவனகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்
நீர்த்தாமரை அல்லது Eichhornia crassipes (Mart.) Solms என்ற அறிவியல் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஆக்கிரமிப்புத் தாவரம், தற்போது விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் முழுவதுமாக பரவிச் சென்றுள்ளதாலும், இதன் துரித வளர்ச்சி வேகத்தின் காரணமாக உள்நாட்டுத் தாவரங்களையும் விஞ்சி உயிரியல் சூழல் தொகுதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாலும், இதன் விளைவாக வண்டல் மண் படிந்து நீர் வழிப் பாதைகள் மற்றும் நீர் வழிந்தோடல் என்பன தடைப்படுவதனூடாக வெள்ளப் பெருக்கு நிலைமைகள் ஏற்படுவதாலும், அன்றாட பாவனைக்கு அவசியமான நீரின் தரம் மாசடைவதாலும் நீர் மின்னுற்பத்திக்கு தடையாக அமைந்துள்ளதாலும், இரசாயன களைக்கொல்லிப் பயன்பாட்டினூடாக அவற்றை அழித்தல், அந்நீரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாலும், இதன் விளைவாக ஏற்படும் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கத்தின் காரணமாக யானைக்கால் நோய் மற்றும் டெங்கு நோய் போன்றவை பரவி வருவதாலும், இத்தாவரத்தை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழிப்பதனூடாக நிலையான தீர்வினை வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் அதற்கேதுவான கருத்திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் காலோசிதமானதென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையப் பணிகளை முடிவுறுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1652 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks