பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் –
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXXII (32) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XI (11), XII (12), XIII (13) மற்றும் XIV (14) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VII (7) மற்றும் VIII (8) ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் VIII (8) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் II (2) மற்றும் III (3) ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVIII (68) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVII (17), XVIII (18) மற்றும் XIX (19) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIII (13) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XI (11), XII (12) மற்றும் XIII (13) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான காலி மரபுரிமை மன்றத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையின் வருடாந்த மீன் உற்பத்தி
(ii) கௌரவ கே. காதர் மஸ்தான்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக 2026.09.09 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
(ii) இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம் தொடர்பாக 2026.09.08 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “த குட்நஸ் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம்
(ii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 224 - நிகழ்ச்சித்திட்டம் 01
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“‘சன் பவர் எனர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவட் லிமிடெட்’ நிறுவனத்தின் சூரிய சக்தி முதலீட்டுத் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks