பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(v) 2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(vi) 2025 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத் - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
காட்டு யானைகளை பாதுகாத்தல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 119 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் குறைநிரப்புத் தொகை -செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தை வலுப்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks