பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
3 : கௌரவ சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்கள் ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படல்
4 : கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரங்க ரத்நாயக்க நியமிக்கப்படல்
5 : 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்படும் அழைப்புக்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் VII (7), VIII (8), IX (9) மற்றும் X (10) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VI (6) ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I (1) ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) பகுதியையும்;
• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50) பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIII (33) பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVII (67) மற்றும் ஒன்பதாவது தொகுதியின் LII (52) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIII (13), XIV (14), XV (15) மற்றும் XVI (16) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XII (12) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VII (7), VIII (8), IX (9) மற்றும் X (10) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iii) 2024 ஆம் ஆண்டின் லோஹொர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் எச்டீஎப்சீ வங்கியின் வருடாந்த அறிக்கை
(v) 2026 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vi) 2026 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஒற்றோபர் 01 ஆம் திகதிய 2508/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.09.01 முதல் 2026.09.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(x) 2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட மகாவலி மதியுரை சேவைகள் பணியகம் (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை
(xi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(xii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான வ/ப லங்கா கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2025 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
2026 மஹா பருவகாலத்தின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக
“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
1983 கறுப்பு யூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான விசேட குழு பற்றிய தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“ஏற்றுமதியாளர்களுக்கு நிதி விடுவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1713 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks