01

E   |   සි   |  

2026 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : கல்வி மறுசீரமைப்பு குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க  - மூன்று மனுக்கள்               
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
வரவுசெலவுத் திட்டம்-2026 இன் முன்மொழிவுகளின் அமுலாக்கம் மற்றும் பௌதீக, நிதிசார் முன்னேற்றம்

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் பொருளாதார மற்றும் நிதிசார் தாக்கம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புகளிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2026.08.18 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii)    ‘நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள்’ மற்றும் ‘நாட்டில் தித்வா பேரழிவிற்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் எல் நினோ நிலைமை’ தொடர்பாக முறையே 2026.09.10 மற்றும் 2026.09.23 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 8/2026) – திருத்தங்களுடன்
(ii)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 11/2026)
– திருத்தங்களுடன்
(iii)    தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(iv)    தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022) 
(v)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015)
(vi)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2016)
(vii)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2017)
(viii)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2018)
(ix)    ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)
(x)    ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(xi)    ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2023)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர வரவேற்பை வழங்குவதில் அரசாங்கத்தின் குறைபாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks