01

E   |   සි   |  

2026 ஒக்டோபர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
3 : “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
4 : புதிய குழு காப்புறுதித் திட்டம் குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அப்போதைய தொழில்நுட்ப அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண சபையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்   119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
சட்டவிரோத மது அருந்துதல் மற்றும் புதிய மதுபான உரிமங்கள் தொடர்பான பிரச்சினைகள்

கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
திலீபன் நினைவு நாள் தொடர்பான பிரச்சினைகள்

கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
‘மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்’ மற்றும் ‘இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்’ தொடர்பாக முறையே 2026.08.07 மற்றும் 2026.10.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
(87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப்பொறுப்புக்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக
“நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 12 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை 
(ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 02
(iii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2021) 
(iv)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2022) 
(v)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2023) 
(vi)    பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021/2022) 
(vii)    பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2022/2023) 
(viii)    தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2021/2022) 
(ix)    தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2022/2023) 
(x)    தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022) 
(xi)    இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023) 
(xii)    இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)



ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார


அதனையடுத்து, 1732 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks