பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழா
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
வட மாகாணத்திலும் மன்னாரிலும் தென்னைச் செய்கையில் 'வெள்ளை ஈ' தாக்கத்தின் விளைவு
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்ட கற்களின் ஏற்றுமதி தொடர்பாக 2026.09.09 அன்று கௌரவ திலிப் வெதஆரச்சி அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) சமீபத்திய எதிர்காலத்தில் எல் நினோ காலநிலையும் உணவுப் பாதுகாப்பும் தொடர்பான கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.
(iii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை தொடர்பாக 2026.09.25 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 4 மற்றும் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. 1, 4 மற்றும் 5 ஆம் விடயங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் குறிப்பிட்டவாறு நிறைவேற்றப்படவில்லை:-
• தியகம வனத்தைப் பாதுகாத்தல்
கொழும்புக்கு அருகாமையில் எஞ்சியுள்ள கடைசி நகர்ப்புறத் தாழ்நில மழைக்காடுகளில் ஒன்றாகவும் நகரத்திற்கு மிக நெருக்கமான மழைக்காட்டுப் பகுதியாகவும் தியகம வனம் காணப்படுவதனாலும்; பொல்கொட ஆற்றிற்கு நீர் வழங்கும் அதன் சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகள் ஊடாக நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இயற்கையான வெள்ளத் தடுப்பு அரணாக இது முக்கிய பங்கு வகித்து, அதன் மூலம் சுற்றியுள்ள சமூகங்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பதனாலும்; சிவப்பு தேவாங்கு, ஊதா முகக் குரங்கு மற்றும் கொடுபுலி போன்ற அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்கள் உட்பட 220 இற்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களுக்கு இந்த வனம் வாழ்விடமாக அமைந்திருப்பதனாலும்; சுமார் 12.6% நிலப்பரப்புக்குரிய தாவர இனங்களுக்கும் 11.58% நிலப்பரப்புக்குரிய விலங்கினங்களுக்கும் கடைசிப் புகலிடமாக விளங்கும் ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இது திகழ்வதுடன், இவற்றில் பல விலங்குகள் நகர்ப்புற விரிவாக்கத்தினால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதனாலும்; தியகம வனம் அதன் தேவாங்கு இனங்களுக்காக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன் சுற்றுச்சூழல் - சுற்றுலாவுக்கான காத்திரமான சாத்தியத்தினைக் கொண்டிருப்பதனாலும்; உயிரியல் பல்வகைமை, காலநிலை மீண்டெழுந்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பேணுவதற்கு இந்த வனத்தைப் பாதுகாப்பது அவசியமானது என்பதனாலும்; தியகம வனத்தின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதது என்பதோடு, எதிர்கால சந்ததியினருக்காகவும் இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகவும்; அதன் உடனடிப் பாதுகாப்பு கட்டாயமானது என்பதனாலும் இந்தப் பாராளுமன்றம் தியகம வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து காடழிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (FFPA) கீழ் அதனைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டுமெனவும், அதனை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமெனவும், அத்துடன் எதிர்கால ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலைபேறற்ற அபிவிருத்திகளுக்கு எதிராகச் சாத்தியமான வலுவான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
• 1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்
1983 ‘கறுப்பு ஜூலை’ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளும், இன மோதல்களும், வன்முறைகளும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளதாலும், மேற்படி மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டதாலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் தீயிட்டு முழுமையாக அழிக்கப்பட்டதாலும், இச்சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் இந்த மோதல்களையும் வன்முறைச் சம்பவங்களையும் வழிநடத்தியவர்கள் அடையாளங்காணப்படவில்லை என்பதாலும், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து பரந்துபட்டதும் சுயாதீனமானதுமான விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், இவ்வாறான இன மோதல்களும் வன்முறைகளும் இனியும் இந்த நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாததென்பதாலும், மேற்படி வன்முறைகள் குறித்த உண்மையை கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இந்த பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
நுண் நிதிக் கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுள் பெருமளவானவர்கள் தற்போது அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களாக இருப்பதனால், மேற்படி நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்
விளையாட்டு அமைப்புக்கள் இலங்கையில் பெருமளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகப் புலப்படுவதன் காரணமாக, தோ்தலில் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்புகளில் போட்டியிடுவதிலிருந்தும் தலைமைப் பதவிகளை வகிப்பதிலிருந்தும் தடை செய்யப்படுதல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வலுச்சக்தி துறையை மறுசீரமைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1633 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks