பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
2 : “ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் III (3) மற்றும் IV (4) ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதி ─ மின்சார வாகனங்கள் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்திய முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு – இலங்கை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 14 ஆம் திகதிய 2501/88 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்கான தேசிய உத்தி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) ‘2018 முதல் 2026 வரையிலான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா செயற்றிறன் தொடர்பான விபரங்கள்’ மற்றும் ‘இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை’ தொடர்பாக முறையே 2026.07.22 மற்றும் 2026.09.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.
(ii) ‘சமூக, பொருளாதார மற்றும் நிதிப் பலன்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு’ மற்றும் ‘இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம்’ தொடர்பாக முறையே 2026.06.09 மற்றும் 2026.09.08 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks