பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLV (45) ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXVII (67) ஆம் பகுதியையும்;
• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXXII (72) மற்றும் LXXIII (73) ஆம் பகுதிகளையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II (2) மற்றும் III (3) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018/2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கம்பனியின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi) 2025 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த அறிக்கை
(viii) 2025 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2025 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டார
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
கூரை மீது சூரிய மின்சக்தி முறைமையின் புதிய ஒப்பந்தம்
கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை குடிமகன் சிவராசா அனோஜன்
கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 2027 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“ஒதுக்கீடு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) இலங்கையினுள் ஆட்கள் உட்பிரவேசிப்பதனையும் இலங்கையிலிருந்து புறப்படுவதனையும் கட்டுப்படுத்துவதற்காகவும்; இலங்கைப் பிரசைகளல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருப்பதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும்; பயண ஆவணங்களை வழங்குவதற்காகவும்; (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தையும் 1971 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப்பத்திரச் சட்டத்தையும் நீக்குவதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக
“குடிவரவு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks