02

E   |   සි   |  

2026 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களால் எனக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு தொடர்பான தீர்ப்பு
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல் 
3 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் 
4 : அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் நான்காவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகள்

(ii)    
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI (66) ஆம் பகுதியையும்; மற்றும்
•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதிச் சேவை ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.08.03 முதல் 2026.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    2024 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை
(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கை மத்திய வங்கியின் 'இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2026' அறிக்கையைத் தயாரிப்பதில் காலாவதியான புள்ளிவிபரங்களைப் பயன்படுத்துதல் 

கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வட மாகாண ஆளுநரால் நீதி நிருவாகத்தில் முறையற்ற தலையீடு தொடர்பாக 2026.06.12 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
(i)    இலங்கைக் கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டிற்காக, ஆளுகைக்காக, ஒழுங்குப்படுத்தலுக்காக, ஊக்குவிப்புக்காக, விருத்திக்காக மற்றும் நிருவாகத்துக்காக இலங்கைக் கிரிக்கெட்டினைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; நல்லாட்சி, நோ்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, வகைக் கூறவேண்டியமை, உள்ளடக்குந்தன்மை மற்றும் சமமான வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற கோட்பாடுகளினூடாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும்; எல்லாப் பங்கேற்பாளர்களினதும் நல்வாழ்வினைக் காப்பதற்கும் ஊழல் மற்றும் வேறு முறையற்ற நடத்தையிலிருந்து கிரிக்கெட்டினை பேணிக்காப்பதற்கும்;  இலங்கைக் கிரிக்கெட்டின் அமைத்துருவாக்கம், தத்துவங்கள் மற்றும் பணிகளுக்கு ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கைக் கிரிக்கெட்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.

(ii)    இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்பட்ட பயங்கரவாதச் செயல்களிலிருந்தும், பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் பயங்கரவாதம் என்ற தவறாகவமைகின்ற குறித்தசில குறித்துரைக்கப்பட்ட செயல்களிலிருந்தும் இலங்கையின் தேசிய பந்தோபஸ்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்காகவும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்காக ஆயத்தஞ்செய்வதற்கு இலங்கைக் குடியரசின் ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறேதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளைக் கண்டுபிடிப்பதற்காகவும், அடையாளங்காண்பதற்காகவும், பற்றுவதற்காகவும், கைதுசெய்வதற்காகவும், தடுத்துவைப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும், அவருக்கெதிராகக் குற்றவழக்குத்தொடுப்பதற்காகவும் மற்றும் அவரைத் தண்டிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நைதெனியா காணியை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு மாற்றுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 7ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks