பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ. அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
(ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் காணிப் பிரச்சினை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தேசிய எல் நினோ தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திட்டம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2026.08.04 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நாய்களின் இனப்பெருக்கலை ஒழுங்குபடுத்துதல் என்பன மூலம் இலங்கையில் விசார்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்காகவும்; நாய்களைப் பதிவுசெய்வதற்காகவும்; தேசிய விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு மதியுரைக் குழுவையும் பிராந்திய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு மதியுரைக் குழுக்களையும் தாபிப்பதற்காகவும்; (476 ஆம் அத்தியாயமான) விசர்நாய்க்கடி நோய்க் கட்டளைச் சட்டத்தையும் (477 ஆம் அத்தியாயமான) நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச்சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக
“விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-
(i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
அதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks