E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ எம்.எஸ் தெளபீக் அவர்களுக்கு "காசிமி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது (ஆதரவாக 58; எதிராக 04)
• அரச கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஹம்பந்தோட்டை லங்கா ஸோல்ட் தாபன ஊழியர்களது பிரச்சினைகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1917 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஆகஸ்ட் 11 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks