E   |   සි   |  

2026 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆண்டறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/37 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/38 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கற்புல ஊனமுற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - இரண்டு மனுக்கள் 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தில் உள்ள சிக்கல்கள் 

கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் துறைமுகங்கள் மற்றும் விமானத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களின் விபரங்கள் 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை காரணமாக விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.
(ii)    இலங்கையில் எல் நினோ நிலைமை தொடர்பான கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.
(iii)    ‘செஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்’ தொடர்பாக 2026.05.22 ஆம் திகதி, ‘செயற்படாத மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களால் அரசுக்குச் சொந்தமான வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு’ தொடர்பாக 2026.08.05 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2026 ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றை மேற்பார்வை செய்வதற்கு ஏற்புடைய சட்டங்கள் திருத்தப்படாத காரணத்தினால், 21 ஆண்டுகளுக்கும் அதிகமாக பெற்றோலியம் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலிருக்கும் நிலையை மாற்றுவதற்காக ஏற்புடைய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்

2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதாலும் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல்

நவீன பாடசாலைக் கல்வி முறையைப் போன்றே பாரம்பரியக் கல்வி முறையான பிரிவென கல்வி முறையும் இலங்கையில் நடைமுறையிலுள்ள பிரதான கல்வி முறையாக காணப்படுவதாலும், நவீன பாடசாலைக் கல்வி முறையில் அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரமும் பிரிவென கல்விக்கு அல்லது அதன் ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்கள், பொதுநிலை மாணவர்கள் ஆகிய இரு தரப்புக்கும் உள்ளபடியே கிடைப்பதில்லை என்பதாலும், பிரிவென கல்வி தொடர்பில் ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ள பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகை அறிவிடுவதை 2026 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கைக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா சூறாவளி’ காரணமாக கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்கள் பெருமளவில் மண்சரிவுக்கு உள்ளாகியிருப்பதாலும், தற்போது இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்கு, மந்தி, மர அணில் போன்ற வனவிலங்குகளால் பயிர்களுக்குச் சேதங்கள் ஏற்படுகின்றமையினாலும், இவ்வனவிலங்குகளின் உணவுத் தேவைக்காகவும், சுற்றாடல் சமநிலையைப் பாதுகாப்பதற்கும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும், மேற்படி மண்சரிவுக்குள்ளாகியுள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் பலா, மா, ஈரப்பலா, காட்டுமா போன்ற உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    கித்துள்  கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்

யுனெஸ்கோ அமைப்பு, இலங்கையின் கித்துள் வடித்தல் தொழில்நுட்பத்தினை உலக பாரம்பரியமாக பெயரிட்டுள்ளதனூடாக எமது நாட்டைப் பற்றிய கௌரவம் உலகத்தின் முன்னிலையில் உயர்ந்துள்ள காரணத்தினாலும், காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, கம்பஹா உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் இந்த பாரம்பரிய கித்துள் சார்ந்த கைத்தொழிலைப் பாதுகாத்தவாறு சுமார் ஆயிரக்கணக்கான கைத்தொழிலாளர்கள் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளமையினாலும், இந்தக் கைத்தொழிலை முன்னேறி வரும் சுற்றுலாத் துறையுடன் ஒன்றிணைப்பதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிராமிய சாதாரண மக்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான புதியதொரு பாதையை அமைப்பதற்கும், கித்துள் கைத்தொழிற்றுறையின் நீண்டகால பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம்  பிரேரிக்கின்றது.

•    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சந்தைக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் நவீன தொழில்நுட்ப பட்டதாரிகளை வழங்கும் பல்கலைக்கழகம் என்பதால், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் மருத்துவத்துறை உள்ளிட்ட உலகளாவிய தேவைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவ வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். சமந்த ரனசிங்ஹ  


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks