பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தினை பரிசீலனைக்காக சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள்
(ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
புத்தளம் மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் முன்வைத்தார்.
(ii) எல் நினோ நிலைமையின் கீழ் நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பான கூற்றொன்றினை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ அவர்கள் முன்வைத்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர்அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2026 ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2026 டிசம்பர் 19 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை முழுவதும் கிராம மக்களுக்கான சிறப்புப் பராமரிப்பு மையங்களை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1749 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks