E   |   සි   |  

2026 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அமர்வு
2 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல் 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2025 ஆம் ஆண்டுக்கான நீதிச்சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான ஜி எஸ் எம் பி டெக்னிகல் சேவிசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(v)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 488) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)        அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 490) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2025 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கட்டிடத் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)        அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசு தொழிற்சாலைகள் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    அப்போதைய நீர் வழங்கல் அமைச்சு, அப்போதைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, அரசுத் தொழிற்சாலைகள் துறை மற்றும் கட்டிடத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம் 

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை 


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks