logo

02

E   |   සි   |  

2026 ஆகஸ்ட் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பேண்தகு அபிவிருத்திப் பேரவையின் ஆண்டறிக்கைகள்
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    அராசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    2024/2025 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆண்டறிக்கை
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ ரவி கருணாநாயக்க
கைத்தொலைபேசி இலக்க பெயர்வுத்தன்மை மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவைகள் தொடர்பான விடயங்களைச் செயல்படுத்துதல்

கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்தல் 

கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கவும், கள்ள வர்த்தகத்தை ஒழிக்கவும், அரசுக்கு சட்டப்பூர்வ வருவாயை அதிகரிக்கவும் அரசு கையாளும் உத்தி தொடர்பாக 2026.06.11 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    விலங்குகள் (திருத்தம்)
(ii)    தேசிய நீர்வழங்கல், வடிகால் சேவைகள் சபை (திருத்தம்)



ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட


அதனையடுத்து, 1808 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks