logo

E   |   සි   |  

2026 ஜுலை 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது உறுப்பினர்கள் ஆற்றவிருக்கும் உரைகள் தொடர்பானது
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2025 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ix)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(x)    அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi)    அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து சேவை அதிகாரசபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன  - மூன்று மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தொடர்பான தகவல்கள்

கௌரவ தொழில் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் டிஜிட்டல் உருமாற்ற முறைமையை செயல்படுத்துதல்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ டி.வீ. சானக அவர்களுக்கு “பொருளாதார மற்றும் கிராமிய மூலவளங்கள் அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 36; எதிராக 152) பின்னர் தோற்கடிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks