பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையத்தின் ஆண்டறிக்கை.
(vi) 2024/2025 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vii) 2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2025 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2025 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ கே.காதர் மஸ்தான்
மன்னார் மாவட்டத்தில் கமத்தொழில் பதில் பணிப்பாளரின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள்
கௌரவ கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
2018 முதல் 2026 வரையிலான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா செயற்றிறன் தொடர்பான விபரங்கள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) ஊடக உயர்தொழிலர்களுக்கான உயர்தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும் பேணுவதற்குமான நோக்குடன் இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகத்தைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க
அதனையடுத்து, 1546 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 23ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks