பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : துரித அஞ்சல் மூலம் உத்தியோகபூர்வ பாராளுமன்ற வெளியீடுகளை விநியோகித்தல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXIV (24) ஆம் பகுதியையும்;
• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXXI (71) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXI (61) ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XXVII (27) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLV (45) ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு மற்றும் நான்காவது காலாண்டு ஆகியவற்றுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(v) 2025 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கடற்றொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அராசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் லங்கா சதொச லிமிட்டெட்டின் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அராசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(x) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் அதன் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi) 2025 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர - ஐந்து மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் செலுத்துதலில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பான பிரச்சினைகள்
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
அஸ்வெசும நல உதவித் திட்டத்தை செயல்படுத்துதல், பயனாளி தேர்வு, நிர்வாகம் போன்றவை.
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, விலங்குகள் சட்டத்தைத் திருத்துவதற்காக
“விலங்குகள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“தேசிய நீர்வழங்கல், வடிகால் சேவைகள் சபை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரண்டு தீர்மானங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்கள்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயற்றிறன்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1741 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 22ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks