பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான உயர் நீதிமன்ற நீதியரசர்களின் செயலாற்றுகை அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேர்தல் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணகை்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 15 ஆம் திகதிய 2493/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 18 ஆம் திகதிய 2493/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 2025 ஆம் ஆண்டுக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வெகுசன ஊடகப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2025 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii) 2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(xiii) 2025 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் கடற்றொழில் வெகுமதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2025 ஆம் ஆண்டுக்கான வலுசக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2025 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2025 ஆம் ஆண்டுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2024 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் திருட்டு மற்றும் கடற்கொள்ளைக்கான தீர்வு
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) ‘தித்வா’ புயல் நிவாரண விபரங்கள் தொடர்பாக 2026.06.10 அன்று கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) என்டிபி வங்கியில் நிதி மோசடி மற்றும் ஒழுங்குமுறைகளில் மத்திய வங்கியின் பொறுப்புக்கூறல் தொடர்பாக 2026.05.05 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3 மற்றும் 5 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய மடுவன்வெல பிரபுமனை (வலவ்வ) முதற்கொண்டு இலங்கையில் புராதன பெறுமதி வாய்ந்த தலங்களைப் பாதுகாத்தல்
இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான மடுவன்வெல பிரபுமனை முதற்கொண்டு இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான புராதன பெறுமதி வாய்ந்த தலங்கள் காணப்படுவதாலும், இத்தலங்கள் சுற்றுலா ஈர்ப்பைக் கொண்டுள்ளதாலும், தற்போது இவை கடுமையாக பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாலும், இவற்றின் மரபார்ந்த தொன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பேணிப் பாதுகாத்து அத்தகைய தலங்களுக்குச் சொந்தமான காணிகளை துரிதமாக அளவை செய்தும் நிர்ணயம் செய்தும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து சுற்றுலாக் கைத்தொழிலுக்காகப் பயன்படுத்த அவற்றைப் பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counsellor) ஒருவரை நியமித்தல்
தற்போது பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறு உளவியல் சார்ந்த பின்னடைவுகள் காணப்படுவதனாலும், இந்த நிலைமைகள் அவர்களின் உடல் மற்றும் சமூக இருப்பில் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துவதனாலும், சில சந்தர்ப்பங்களில் பாடசாலைகளுக்கென பாடசாலை உளவள ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மேற்படி பதவியில் பாடசாலை ஆசிரியர்களின் வகிபாகமும் உள்ளடங்குவதன் காரணமாக இதன் ஊடாக எதிர்பார்க்கப் படுகின்ற சேவைகள் பயனுறுதிமிக்கவாறு கிடைக்கப்பெறாமையினாலும், சகல பாடசாலை களிலும் உளவள ஆலோசகர் ஒருவரின் அவசியத்தன்மை எழுந்துள்ளதனாலும், பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் ஒருவரை நியமனஞ் செய்யத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• “ரட்டவிருவன்” (புலம்பெயர் வீரர்கள்) என்றழைக்கப்படும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை வகுத்தல்
இலங்கையின் தேசியப் பொருளாதாரத்தை உயிரூட்டுவதற்காக புலம்பெயர் தொழிலாளர்களால் வழங்கப்படும் பங்களிப்பு மிகவும் விசேடமானது என்பதனாலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளில் பல வருட காலமாக தொழில் செய்த பின்னர் இலங்கைக்கு மீண்டும் வந்து தமது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்கின்றபோது ஒரு சில சந்தர்ப்பங்களில் மீண்டும் அவர்களுக்கு தொழில் புரிவதற்கான ஆற்றல் இல்லாததன் காரணமாக பல்வேறு சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதனாலும், அரசாங்கம் அவர்களிடமிருந்து அந்நியச் செலாவணியாக கிடைக்கப் பெறுகின்ற நிதியிலிருந்து குறித்ததொரு சதவீதத்தைப் பயன்படுத்தி ஓய்வூதிய நிதியமொன்றைத் தாபித்து, ஓய்வூதியத் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிலுள்ள உணவகங்களில் மாணவர்களுக்கு பாதகமான உணவு வகைகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறையொன்றை உருவாக்குதல்
இலங்கையின் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் பரவலாக கண்டறியப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாலும், நீரிழிவு நோய்க்கு உணவு வகைகளுடன் உணவுப் பழக்கம் மற்றும் உணவு முறை ஏதுவாக உள்ளதாலும், இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் அமைந்துள்ள பாடசாலை உணவகங்களில் நீரிழிவு நோய்க்கு காரணமாகவுள்ள சீனி மற்றும் மா கலந்த உணவுகளுடன் பிரைட் ரைஸ், கொத்து, துரித நூடில்ஸ் போன்ற உணவு வகைகள் பெருமளவில் மாணவர்களுக்கு விற்கப்படுவதாலும், எமது நாட்டின் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை உணவகங்களில் விற்கப்பட வேண்டிய உணவு மற்றும் பான வகைகள் தொடர்பாக அரசாங்கம் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
இலங்கையில் யாழ்ப்பாண பிரதேசத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், யாழ்ப்பாணத்தை ஒரு உயிர்ப்பான கலாசாரப் பயண முடிவிடமாக மாற்றமுடியுனெ்பதால், யாழ்ப்பாணமும் இலங்கையின் வட மாகாணமும் பிரதான கேந்திர இடங்களாக அங்கீகரிப்பதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரதேசத்தின் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைப்பை ஏற்படுத்தல், உண்மையான சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தல், இலங்கையின் வட மாகாணத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையினையும் அவர்களின் திருப்தியையும் அதிகரிப்பதற்கான உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் இணைப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்துகின்ற கொள்கைகள் மற்றும் முதலீடுகளுக்காக ஆதரவளிக்கின்ற, பிரதேசத்தில் சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்பாட்டாளர்களை வலுவூட்டுகின்ற மற்றும் கலாசார மரபுரிமைகளை மேம்படுத்தும் சுற்றுலாத்துறைச் சேவை வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் அவற்றுக்கு வசதியளிப்பதன் மூலமும் யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் சுற்றுலா கைத்தொழிலின் நிலையான அபிவிருத்தி மற்றும் பொருளாதார விருத்தியை மேம்படுத்துகின்ற அரச-தனியார் பங்காண்மையை மேம்படுத்துவதன் மூலமும் 12 முதல் 18 மாதங்களில் நிலைபேறான பொருளாதாரப் பயன்களை அடைந்துகொள்ளும் இலக்கை நோக்காகக் கொண்டு பிராந்தியத்தின் தொழில் மற்றும் வணிக வாய்ப்புகள் மீது அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்காணிப்பதனூடாக யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்ட சுற்றுலா தளமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சுற்றுலாத் துறைக்கான சந்தை சார்ந்த உத்தி” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1627 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks