பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1: கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
2 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக “மனித விற்பனை குறித்த விளக்கமளித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி”
3 : பாராளுமன்றத்தில் “தியவன்னா பொசன் பெதி கீ சரனிய” நிகழ்வு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் நிதியாண்டுக்கான பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வருடாந்த கடன் முகாமைத்துவ அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11 ஆம் பிரிவின் பிரகாரம், 2027 ஆம் ஆண்டுக்கான நிதி செயல் நுணுக்கக் கூற்று
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழிநுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2025 ஆம் ஆண்டுக்கான கொம்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை
(viii) 2025 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2025 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) மதுர செனெவிரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கை
(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிடி ஸ்கேன் இயந்திரம் பற்றாக்குறை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
2026 ஹஜ் யாத்திரையில் யாத்திரிகர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பாக 2026.06.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கட்டளை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல்” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks