logo

03

E   |   සි   |  

2026 ஜுன் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(v)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    2024 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் துணி தொழில் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(x)    2023 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xi)    2024 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(xii)    2025 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2023 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் இரண்டு அறிக்கைகள் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ (திருமதி) ஹேமாலி வீரசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா - மூன்று மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
செம்மணி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான தேடல்கள் மற்றும் விசாரணை 

மேற்சொன்ன வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் இலக்குக்குக் குறைவான பணவீக்கம், பணவியல் கொள்கை தளர்வு மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுதல் தொடர்பாக 2026.03.04 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர், கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களுக்கு “இலங்கை மருந்தாக்கவியல் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை
“போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1746 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks