பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : கௌரவ ஜீ. ஜீ. பொன்னம்பலம், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
3 : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
4 : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
5 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “ஒவ்வாமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இனங்காணுதல்” நிகழ்ச்சித்திட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI (66) ஆம் பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI (56) மற்றும் LVII (57) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLI (41) மற்றும் XLII (42) ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I (1) ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி - தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 2022 செப்தெம்பர் முதல் 2024 ஆகஸ்ட் வரை அமுல்படுத்தப்பட்ட நீர் கட்டண திருத்தங்கள் தொடர்பான தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மீயுயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 17 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 23 ஆம் திகதிய 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v) 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டத்தின் 51 ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, 2025 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத்திட்ட நிலை பற்றிய அறிக்கை
(vii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 157அ, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதிய 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை
(x) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ஹெட்டிஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கை துறைமுக அதிகாரசபையில் கிழக்கு முனைய கட்டுமானம் மற்றும் இதர பிரச்சினைகள்
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
விவசாயிகளின் போராட்டம் மற்றும் நெற் செய்கையிலுள்ள இதர பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக 2026.01.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
(ii) அரசாங்கத்தால் பிரதம மதத் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளின் விபரங்கள் தொடர்பாக 2026.03.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (iv) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மீன்பிடித் தொழிலில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1743 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 24ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks