E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ டி.பி. விக்கிரமசிங்க
(ii) மறைந்த கௌரவ ஹெரீ அபேதீர
(iii) மறைந்த கௌரவ மெரில் பர்னாந்து



இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 20 முதல் 23 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது:-

• சமனலகிரி சதராங்க (நாடி) வைத்திய சபை (கூட்டிணைத்தல்)
• ஒலகங்கல மஹா சுதர்ஷன பரோபகாரி மன்றம் (கூட்டிணைத்தல்)
• லெஸ்டர் ஜேம்ஸ் மற்றும் சுமித்ரா பீரிஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)
• அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (கூட்டிணைத்தல்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கேகாலை மண்சரிவில் சிக்கியோருக்கான நஷ்டஈடு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வை.ஜீ. பத்மசிரி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1831 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 24 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks