E   |   සි   |  

2026 ஜுன் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ எஸ். எம்.மரிக்கார், பா.உ. அவர்கள் எழுப்பிய சிறப்புரிமை விடயம்
2 : நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) எனும் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்புப் பேரவையின் ஏழாவது அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    (188 ஆம் அத்தியாயமான) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 46 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 47 ஆம் பிரிவின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமனுக்கள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க  -  மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம -  இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி - இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்
வவுனியா மாநகர சபையின் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள்

மேற்சொன்ன வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம்
வட மாகாண ஆளுநரால் நீதி நிருவாகத்தில் முறையற்ற தலையீடு


சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 ஜூன் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 75 மற்றும் 76 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 02



ஒத்திவைப்புப் பிரேரணை
 “2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks