பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் வருடாந்த அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான முடிவு
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கவும், கள்ள வர்த்தகத்தை ஒழிக்கவும், அரசுக்கு சட்டப்பூர்வ வருவாயை அதிகரிக்கவும் அரசு கையாளும் உத்தி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வடமராட்சியில் உள்ள பருத்தித்துறை பகுதியில் இரண்டு மீனவர்கள் காணாமல் போனது தொடர்பான விபரங்கள் தொடர்பாக 2026.06.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரை களையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2026 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 செப்தெம்பர் 19 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம்
(ii) குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks