E   |   සි   |  

2026 ஜுன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 
2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 


சபாநாயகரின் அறிவித்தல்கள்
3 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
4 : "பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
5 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு
6 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்ச
7 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII (57) ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV (54) மற்றும் LV (55) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIX (39) மற்றும் XL (40)  ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 31 ஆம் திகதிய 2482/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மே 04 ஆம் திகதிய 2487/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 07 ஆம் திகதிய 2487/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள் 
(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பகிரங்க சேவை ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 மே 28 ஆம் திகதிய 2490/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xii)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுவான அல்லது முன்னுரிமை அடிப்படையில் பொருந்தக் கூடிய சுங்க இறக்குமதித் தீர்வையின் மீது விதிக்கப்படும் 50% மேலதிகக் கட்டணத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் நீடித்தல் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 சனவரி 31 ஆம் திகதிய 2473/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 12 ஆம் திகதிய 2479/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.04.02 முதல் 2026.04.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    தேசிய கனிமக் கொள்கை – 2026
(xvii)    2025 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அநுராதபுர மாவட்ட செயலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix)    2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 1(2) ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வலுசக்தி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 05 ஆம் திகதிய 2478/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    2022 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்திற்கான ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார   - நான்கு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
தேசியப் பொருளாதார, நிதி மற்றும் பணவியல் கொள்கைகளின் விபரங்கள்

கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
சமூக, பொருளாதார மற்றும் நிதிப் பலன்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    “தித்வா” புயல் நட்டஈடு தொடர்பாக 2026.01.07 அன்று கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii)    சுற்றுலா வருகைக்கும் தனிநபர் சுற்றுலா வருவாய்க்கும் இடையிலான துண்டிப்பு தொடர்பாக 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை  
(ii)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை  
(iii)    உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை 
(iv)    பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(v)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான தீர்மானம்
(vi)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
– வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 135; எதிராக 07)


அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 10ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks