பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) என்னும் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸினஸ் மெனேஜ்மன்ட் (கரண்டி) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நாகானந்த இன்டர்நஷனல் இன்ஸ்டிடியூட் போ புடிஸ்ட் ஸ்டடிஸ் (பிறைவேட்) லிமிடெட் (NIIBS) நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) என்னும் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 13 ஆம் திகதிய 2458/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சதுரங்க அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். தாஹிர்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் இதர நபர்கள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு “அல் - ஹாஷிமி சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 12 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1742 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks