பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : "பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : "நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) " எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LII (52) மற்றும் LIII (53) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVII (37) மற்றும் XXXVIII (38) ஆம் பகுதிகள்
B.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I (1) ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியினது ─ 2024 ஜூன் 30 ஆம் திகதியில் உள்ளவாறான பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்களிடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறவிடப்பட வேண்டிய நிலுவை வரிகள், தண்டப்பணம் மற்றும் வட்டி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகளும் தொழிற்பாடுகளும்
(iii) 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 பெப்புருவரி 24 ஆம் திகதிய 2477/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) திருத்தப்பட்டவாறான 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2 அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான விடயங்கள் பற்றி 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii) 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான 2025, யூலை மாதத்தில் கையொப்பமிடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 சனவரி 05 ஆம் திகதிய 2470/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 2023 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv) 2023 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஆண்டறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம்” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “கோதாகொட குணரதன நாஹிமி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கான தீர்வு
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
எதிர்கால இணையப் போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் மொத்தமாக பணம் எடுப்பதை மாதாந்த ஓய்வூதிய திட்டமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளமை தொடர்பாக 2026.01.22 மற்றும் அரசாங்க உத்தியோகபூர்வ இருப்புக்கள் தொடர்பான மத்திய வங்கியின் புதிய சுற்றறிக்கை தொடர்பாக 2026.02.18 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“சோ்பெறுமதி வரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மனித - யானை மோதலுக்கான நிலைபேறான தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 20ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks