01

E   |   සි   |  

2026 மே 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமை காரணமாக வெள்ளிக்கிழமை, 8 மே 2026 அன்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய சபை மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற அருண் ஹேமச்சந்திரா - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன- இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோக செயல்முறை

கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
வடக்கில் விடுவிக்கப்படாத தமிழ் மக்களின் காணிகளை முறைகேடாக பயன்படுத்தல் மற்றும் மீளளிப்பு நடவடிக்கைகள் 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    வட்டகச்சியிலுள்ள கமத்தொழில் பாடசாலை மற்றும் பண்ணை இயங்காமை தொடர்பாக 2026.01.07 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.

(ii)    நாட்டில் வறுமைக்கான வரையறை, புள்ளிவிபரங்கள், கொள்கை போன்றவை தொடர்பாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எம். ஏ. எம். தாஹிர் அவர்களுக்கு “மாஸ் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் 
(ii)    மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
– வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 145; எதிராக 06)
(v)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்



அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1135 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks