01

E   |   සි   |  

2026 மே 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் ஆண்டறிக்கை. 
(ii)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 ஏப்பிறல் 28 ஆம் திகதிய 2486/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(iii)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.03.04 முதல் 2026.03.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே  - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - நான்கு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ கே. காதர் மஸ்தான்
தேசிய முன்பள்ளி முறைமையை உருவாக்குவதற்காக முன்பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்

கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
2025/2026 மஹா பருவத்தில் நெல் உற்பத்தியில் ‘தித்வா’ புயலின் தாக்கம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிதி நிலை, மறுசீரமைப்பு போக்கு மற்றும் நிதி வெளிப்பாடு தொடர்பாக 2026.02.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலு சக்தி அமைச்சர், கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தம்) - 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    நிதி (திருத்தம்) - 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது

(iii)    1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தைத் திருத்துவதற்காக
“தேசிய சூழல் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ சுற்றாடல் அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 07ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks