பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
3 : “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
4 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXI (31) மற்றும் XXXII (32) ஆம் பகுதிகள்
(ii) இலங்கை இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் ─ லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி கம்பனியால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு செயன்முறை மற்றும் 2025 / 2026 காலப்பகுதிக்கான நிலக்கரி பெறுகைகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v) 2024 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாலிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 மார்ச்சு 28 ஆம் திகதிய 2481/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(ix) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2025 ஒக்டோபர் 03 ஆந் திகதி முதல் 2025 டிசம்பர் 31 வரையான “வீரமன்ட் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஏற்பாட்டு மாற்றல்” தொடர்பான தகவல் அறிக்கையிடல்
(x) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.02.02 முதல் 2026.02.27 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் துறைகளை நிறுவுதல் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 03 ஆம் திகதிய 2465/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xiii) 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவுகள் 18, 24, 28 மற்றும் 30 உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, சொல்லப்பட்ட சட்டத்தின் 44 ஆம் பிரிவின் (எ) மற்றும் (ஒ) பந்திகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 17 ஆம் திகதிய 2471/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24 மற்றும் 24அ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 05 ஆம் திகதிய 2470/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv) அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
(xvii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் குமார கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
எரிபொருள் பாதுகாப்பு, விநியோகம், வரிவிதிப்பு போன்றவை தொடர்பான பிரச்சினைகள்
கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) 07 முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்களை தேசிய வீரர்களாக அறிவிக்கக் கோரிக்கை தொடர்பாக 2026.01.21ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) தலைமன்னார் ராமேஸ்வரத்தில் இயக்கப்படும் படகு சேவைகளின் விபரங்கள் தொடர்பாக 2025.08.21ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர், கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – திருத்தங்களுடன்
(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iv) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்
(v) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல்
(vi) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
அதனையடுத்து, 1806 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 08ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks