E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

1. சுயதொழிலாக கமத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கடனுதவிகளை அளித்தல்

சுயதொழிலாக கமத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கடனுதவியாக அதிகபட்ச கடனாக 2,50,000 ரூபாவை 5% குறைந்த வட்டி வீதத்தில் வழங்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2. கல்முனை நகரத்தில் சந்தங்கேணி பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்தல்

திகாமடுல்ல மாவட்டத்தின் இளைஞர்களுக்கு உயர்தரத்திலான வசதிகளை வழங்கும் பொருட்டும் பல்வேறு துறைசார்ந்த விளையாட்டுக்களிலும் அவர்களது திறமைகள், ஆற்றல் என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டும் சர்வதேச விளையாட்டு மைதானமொன்றாக அனைத்து துறைகளிலும் சந்தங்கேணி பொது விளையாட்டு மைதானம் விருத்திசெய்யப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

3. நீதித்துறை, பொலிஸ் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை ஒன்றிணைத்து சனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமித்தல்

சமூகத்தில் வியாபித்து வரும் குற்றச் செயல்களை குறைப்பதற்காகவும், குற்றவியல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் குறைத்து அதனை மேம்படுத்தியும் காணித் தகராறுகள் உட்பட நீதிமன்றங்களில் குவிந்திருக்கும் விசாரணைகளின் தேக்க நிலையை நீக்குவதற்காகவும் மற்றும் நீதித்துறை, பொலிஸ், சிறைச்சாலை ஆகியவற்றினை நவீன மயப்படுத்தி துரித சேவைகளை வழங்குதனை நோக்கமாகவும் கொண்டு நீதித்துறை, பொலிஸ், சிறைச்சாலை ஆகிவற்றை ஒன்றிணைத்து சனாதிபதி ஆணைக்குழு வொன்றினை நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

4. அங்கவீனமுற்ற மற்றும் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சியை அளித்தல்

அங்கவீனமுற்ற மற்றும் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக மாவட்ட, மாகாண மட்டங்களில் தொழிற்பயிற்சியை அளித்து அப்பிள்ளைகளை முறையான விதத்தில் தொழில்வாய்ப்புகளுக்கு அனுப்பும் திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுன்றம் கருதுகின்றது.

5. மூத்த பிரசைகளின் நிலையான வைப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை 14 % வரை அதிகரித்தல்

கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் மற்றும் தனியார் துறைகளில் நாட்டுக்காக பெரும் பணியாற்றி தற்போது வாழ்க்கையின் வயோதிப பருவத்தை அடைந்துள்ள அநேகமான மூத்த பிரசைகள் தமது தொழிலின் மூலமாக சேமித்துள்ள பணத்தையும், ஊழியர் சேமலாப நிதியையும் நிலையான வைப்புகளில் இட்டு அதற்கு கிடைக்கின்ற வட்டியில் வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதோடு, அரச வங்கிகளின் வருடாந்த வட்டி வீதம் 10.5 % வரை குறைக்கப்பட்டதன் விளைவாக மூத்த பிரசைகளின் நிலையான வைப்புகளுக்கு கிடைக்கின்ற வட்டி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருப்பதால், மூத்த பிரசைகளின் ரூபா15 இலட்சம் அல்லது அதற்கு குறைந்த நிலையான வைப்புகளுக்கான வருடாந்த வட்டியை 14% ஆக அதிகரிக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"விவசாயிகளது ஓய்வூதியத் திட்டம்: உதவித்தொகை அதிகரிப்பு" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1836 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மே 25 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks