02

E   |   සි   |  

2026 பெப்ரவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    நிலையியற் கட்டளைகள் 119 மற்றும் 120 திருத்தங்கள் செய்வது தொடர்பான  நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ சபாநாயகர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி                   
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிதி நிலை, மறுசீரமைப்பு போக்கு மற்றும் நிதி வெளிப்பாடு


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    வணிக மற்றும் வணிகம் சாரா கடன்களின் விபரங்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii)    இலங்கை பொலிஸ் சேவை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச குற்ற வலையமைப்பிற்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் தொடர்பாக 2026.02.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை
“மின்சாரத் துறை தொடர்பான பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1750 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks